பிரதமர் மோடி மதுரைக்கு இன்று மதியம் வரவுள்ள நிலையில், மதுரை மாநகரம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் 'Go back modi' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில், “தமிழ்நாடு ஒற்றுமையாக நிற்கிறது, மத ரீதியான மூளை சலவை வேண்டாம், திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை” போன்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் நல்லமணி பெயரில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.