இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திலும் கொரோனாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமாக உள்ள மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பழைய மருத்துவமனையில் வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.