25 பவுன் நகையை ஒப்படைத்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்

3பார்த்தது
25 பவுன் நகையை ஒப்படைத்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்
மதுரை மாநகராட்சி 75-வது வார்டில், விவசாயி தங்கம் (52) தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 25 பவுன் தங்க நகையை தவறுதலாக வீட்டில் இருந்த பழைய தலையணையுடன் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். இதுகுறித்து அவர் சுகாதார மேற்பார்வையாளர் மருதுபாண்டியனைத் தொடர்பு கொண்டுள்ளார். குப்பையை சேகரித்த தூய்மைப் பணியாளர் மீனாட்சி, நகை இருந்த தலையணையை கண்டறிந்து, நகையை உரிமையாளர் தங்கத்திடம் ஒப்படைத்துள்ளார். நகையை மீட்டுத் தந்த பணியாளர்களுக்கு தங்கம் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி