நீதிபதி குறித்து அவதூறு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

276பார்த்தது
நீதிபதி குறித்து அவதூறு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பதிவாளர் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சாதி அடிப்படையில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்குவதாக வாஞ்சிநாதன் பொதுவெளியில் பேசியதாக பதிவாளர் தெரிவித்தார். வழக்கறிஞரின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதும், அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதன் பிறகே குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கறிஞரின் பேச்சு தொடர்பான குறிப்புகள் மற்றும் ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதை ஆய்வு செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.

தொடர்புடைய செய்தி