தேமுதிக பொதுச்செயலாளர் மதுரையில் போட்டியிட தீர்மானம்

0பார்த்தது
மதுரை கூடல் நகரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் தேமுதிக சிம்ம சொப்பனமாக இருந்ததாகவும், விரைவில் வரவிருக்கும் தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், SIR பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆளும் கட்சியினர் முறைகேடு நடப்பதாக கூறுவதாகவும், தேமுதிக வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய கட்சி உலகிலேயே நம்பர் ஒன் மாநாடாக பெருமை பெற்றுள்ளதாகவும், அவர் முதல்வராகி இருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் என்றும், ஆனால் அவர் மக்கள் மனங்களில் நிரந்தரமாக இருந்துவிட்டதாகவும் பிரேமலதா கூறினார்.

தொடர்புடைய செய்தி