மதுரையில் நாளை (பிப்.21) கமல்ஹாசனின் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.