மதுரையில் திமுக பொதுக்குழு: பிரம்மாண்ட ஏற்பாடு

56பார்த்தது
மதுரையில் திமுக பொதுக்குழு: பிரம்மாண்ட ஏற்பாடு
மதுரையில் இன்று (ஜூன் 1) திமுக பொதுக்குழு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுக்குழு இடத்திற்குச் செல்லும் 5 கிலோமீட்டர் தூரம் முதல்வர் ரோட்டு ஷோ நடத்த உள்ளார்.

பொதுக்குழுவிற்காக மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 

அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அரங்கின் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பம், அண்ணா, கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளுடன் மேடை, 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் குளிரூட்டப்பட்ட அரங்கம், மலர் அலங்காரத்துடன் வரவேற்புக் கூடாரம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், மாநில நிர்வாகிகள், தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரியைச் சேர்ந்த 4,000 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி