மதுரையில் இரட்டை கொலை.

0பார்த்தது
மதுரையில் இரட்டை கொலை.
மதுரை அருகே தேத்தாம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் கடுகுமுனியசாமி (23) மற்றும் வண்டியூரைச் சேர்ந்த நண்பர் மோகன் (25) ஆகியோர் ஏப்ரல் 7 மாலை ஒத்தக்கடை அருகே பட்டணம் கிராமத்தில் கொடிக்குளம் கால்வாய் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, காரில் வந்த சிலர் அவர்களை விரட்டி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். ஒத்தக்கடை ரவுடி 'பொட்டுக்கடலை' பெரியசாமிக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பட்டணம் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஒத்தக்கடை போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.