சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படைக் காவலா்கள் தாக்கியதில் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப் படைக் காவலா்கள் 5 போ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.