அரசு மருத்துவமனையில் ஏலச்சீட்டு குலுக்கல் நடத்தும் ஊழியர்கள்

5பார்த்தது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் பணி நேரத்தில் ஏலச்சீட்டு நடத்தி, குலுக்கல் முறையில் பயனாளர்களைத் தேர்வு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார்டு எண் 303ல் கர்ப்பகால சர்க்கரை நோய் பிரிவு முன்பாகவும், மற்றொரு வார்டு பகுதியிலும் இந்த ஏலச்சீட்டு குலுக்கல் நடைபெற்றதாக வீடியோக்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான ஏலச்சீட்டு நடத்துவது அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டாக வரும் நிலையில், இந்த வீடியோ புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

டேக்ஸ் :