திருப்பரங்குன்றத்தில் ஆக்கிரமிப்பு: ஆட்சியா் பதிலளிக்கஉத்தரவு

1பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் ஆக்கிரமிப்பு: ஆட்சியா் பதிலளிக்கஉத்தரவு
திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிஎஸ்ஐ நிர்வாகம் சார்பில் 7 கடைகள், 8 வீடுகள், ஒரு விடுதி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றை அகற்ற உத்தரவிடக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தேவசகாயம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற எத்தனை உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும், எத்தனை முறை குறிப்பாணை அனுப்பிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பீர்கள் என்றும் அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, தொடர்புடைய ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மண்டல வருவாய் அலுவலர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி