குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்த தந்தை

6பார்த்தது
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்த தந்தை
மதுரை அம்பேத்கர் காலனியில் கோபிராஜ் (39) - காயத்ரி (29) தம்பதியினர் தங்கள் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, மனைவி காயத்ரி தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேற்று, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த கோபிராஜ், தனது இரு மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து, பின்னர் அவர்களை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, கோபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தந்தை மற்றும் இரு குழந்தைகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு கூடல்புதூர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கோபிராஜ் தற்கொலை செய்வதற்கு முன் இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி