மதுரை: கார் ஷோரூமில் மின்கசிவால் தீ விபத்து

1017பார்த்தது
மதுரை சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த ஹீண்டாய் கார் விற்பனை ஷோரூமில் நேற்று (பிப்ரவரி 16)  மாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஷோரூம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் வணிக வளாகத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். ஷோரூமில் இருந்த ஷோபாக்கள், டிவி, மேற்கூரை ஆகியவை தீயில் எரிந்து கருகின. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி