மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், ஹாக்கி மைதானம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 5 பேரை மடக்கிப் பிடித்தனர். தப்ப முயன்ற அவர்களை சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்த கஞ்சாவுடன், செல்லூரைச் சேர்ந்த ஆசிக் அகமது (21), எல்லீஸ் நகர் பழைய காலனியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (18), எல்லீஸ் நகர் கலையரசன் (19) மற்றும் இரண்டு சிறார்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.