அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி, அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு. கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகளைப் பெற்று ஏமாற்றியதாகப் புகார். ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த விவரங்களை ஜெய் பாலாஜி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக இருவரையும் காவலில் எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.