கோரிப்பாளையம் உயர்நிலைப் பாலம்; கட்டுமானப் பணிகள் ஆய்வு

358பார்த்தது
கோரிப்பாளையம் உயர்நிலைப் பாலம்; கட்டுமானப் பணிகள் ஆய்வு
மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் அதிகரித்து வரும் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில், தமுக்கம் மைதானம் முதல் ஏ. வி. பாலம் வரை ரூ. 190.40 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை மாநில கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் கே. ஜி. சத்திய பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்தப் பாலம் அவசர ஊர்திகள் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமாவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி