மதுரையில் இரவு நேரத்தில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்

741பார்த்தது
மதுரை மாநகரின் புதூர், சர்வேயர் காலனி, ஆத்திகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், செல்லூர், பீ.பீ குளம், தபால் தந்தி நகர், ஆனையூர், ஆரப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (நவ.11) இரவு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், மாநகரின் சில பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. கடந்த சில தினங்களாக மதுரை மாநகர் பகுதியில் திடீரென இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி