தமிழக முதலமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மதுரைக்கு நேற்று வந்திருந்த நிலையில் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பந்தல்குடி கால்வாய் தண்ணீர் கொண்டு மறைக்கப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? - முதல்வரை வரவேற்க பந்தல்குடி கால்வாய் மறைக்கப்பட்ட விவகாரம்" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்திருந்தார்.
மதுரையில் திராவிட மாடல் முதல்வர் நடைபயணம் போகும்போது கால் வலிக்கக் கூடாது, அவர் நடக்கும் பாதைகள் மட்டும் புதிய சாலைகள். அவர் கார் செல்லும் ரோடுகள் அருகில் ஓடும் கழிவுநீர் ஓடைகளை பார்க்கக் கூடாது என்பதற்காக பல கிலோமீட்டர் வரை அலங்கார துணியால் மறைப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் எப்படி தி.மு.க ஆட்சியில் செலவழிக்கப்படுகிறது? இந்த பகுதியில்தான் அதிகமாக இஸ்லாமிய, பட்டியலின மக்கள் வாழ்கிறார்கள். வாக்களித்த மக்களே பாருங்கள்" என தன்னுடைய பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.