சட்ட விரோத கல்குவாரி விவகாரம்;அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

1பார்த்தது
சட்ட விரோத கல்குவாரி விவகாரம்;அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த காசிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சட்டவிரோத கல் குவாரிகள் மீது அபராதம் விதிப்பதுடன், குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரினார். இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, சட்டவிரோத கல் குவாரிகள் மீது அபராதம் விதிப்பது மற்றும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும், அபராதத் தொகையை வசூலிப்பது மற்றும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி