பொதுக்கூட்டஇடத்தை ஆய்வு செய்தபின் நயினார் நாகேந்திரன் பேட்டி

5பார்த்தது
மதுரையில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கான இடம் தேர்வு செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மண்டேலா நகர் பகுதியில் உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி, தினகரன், ஜி.கே. வாசன், அன்புமணி ராமதாஸ், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த கூட்டம், திமுகவை வீட்டுக்கு அனுப்பவும், தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத அரசை அகற்றவும் நடைபெற உள்ளதாகக் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி தனியாக நிற்க தயாரா என்றும், அவர்களால் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் திமுகவுடன் செல்வதாகவும் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி