மதுரை மாநகர் திருப்பாலை பகுதியை சேர்ந்த முத்துக்குமார். இவர் மதுரை மேலவெளி வீதியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்தபுரம், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த முத்துராஜா என்ற நகை அடகுகடை உரிமையாளர் முத்துகுமாரிடம் நட்பாக பழகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து முத்துகுமாரிடம் நிலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து முத்துக்குமாருக்கு தனது வீட்டை விற்று ரூ. 2 கோடி பணத்தின் மூலமாக மதுரை மாவட்டம் மாரணி, நத்தம் பரளிப்புதூர் , பாசிங்காபுரம் பொதும்பு ஆகிய பகுதிகளில் நிலத்தை வாங்கி அதற்கான கிரைய பணத்தை வழங்கியதோடு முத்துராஜாவுடன் இணைந்து கிரைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில் தனது 40 லட்சத்தை மோசடி செய்ததோடு தான் வாங்கிய பல்வேறு சொத்துகளை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாகவும், அவரது மனைவி , மருமகள் மற்றும் முத்துராஜா உறவினர் பூபதி, பழனியாண்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முத்துக்குமார் புகார் அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக தன்னை மிரட்டியதாகவும் தற்போது மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து முத்துராஜா மற்றும் அவரது உறவினராக பழனியாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.