மதுரை, அவனியாபுரம் முருகவேல் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணன் (50),
வேலை முடிந்து வீடு திரும்பும்போது, வெள்ளக்கல் பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட நான்கு பேரால் தாக்கப்பட்டார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் திருடன் எனச் சந்தேகிக்கப்பட்ட அவர், எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார். பின்னர் வீட்டுக்குச் சென்ற நிலையில், உறவினர்களால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று (மே 22) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.