மேலூரில், 2021ல் கோயிலுக்குச் சென்ற பாரதி ஜெயசிம்மனை, சின்ன கருப்பு என்பவர் 'ஏன் இங்கு வந்தீர்கள்' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்ட முயன்றார். தடுக்க முயன்ற பாரதி ஜெயசிம்மனின் இடது கை செயலிழந்தது. இதுகுறித்து மேலவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தினர். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி தாமோதரன் நேற்று சின்ன கருப்புக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.