ராமநாதபுரம்: வழக்கறிஞர் கடத்தல் வழக்கு; நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

51பார்த்தது
ராமநாதபுரம்: வழக்கறிஞர் கடத்தல் வழக்கு; நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான செந்தில்வேல் என்பவர் தனது உறவினரான ராஜ்குமார் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை பல மாதங்கள் ஆகியும் திரும்ப கொடுக்காத நிலையில் நேற்று மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் செந்தில்வேல் காரில் வந்தபோது செந்தில்வேல் மற்றும் அவரது ஓட்டுனர் லெட்சுமணன் ஆகிய இருவரும் கார் மூலமாக கடத்தி செல்லப்பட்டனர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே காரை மடக்கி பிடித்தனர். 

பின்னர் காரில் கடத்தப்பட்ட செந்தில்வேல் மற்றும் ஓட்டுனர் லெட்சுமணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் மீட்டனர். இதனையடுத்து செந்தில்வேலை கடத்தியதாக அவரின் உறவினரான ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களான மதுரையைச் சேர்ந்த கௌதம், மாரிமுத்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அப்போது காவல்துறையினரிடம் தப்ப முயன்ற கௌதம் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்குமார், மாரிமுத்து, ஸ்ரீகாந்த் ஆகிய மூவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டதால் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி