மதுரை சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், தமிழகத்தில் 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 30 ஆண்டுகளில் மிகக் குறைந்த நாட்களே நடைபெற்றதாகவும், இது ஜனநாயகப் படுகொலை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆண்டிற்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்துவதாகக் கூறிய நிலையில், தற்போது 161 நாட்கள் குறைவாக நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் பேசும்போது நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி விமர்சனங்களைத் தாங்கும் பக்குவம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பது மன்னராட்சி என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெற்று இதற்கு உரிய சிகிச்சை அளிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.