சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் வரும் மார்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3:20 மணி முதல் மாலை 6:48 மணி வரை சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இதனால், கோயில் காலை 8:20 மணி முதல் மூடப்பட்டு, கிரகணம் முடிந்த பின்பு பூஜை செய்யப்பட்டு இரவு 7:30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். அதன் பின்பு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீனாட்சி அம்மன் உப கோயில்களான 22 கோவில்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.