மதுரை: 17 வயது சிறுவன் செல்போனை உடைத்துவிட்டு தற்கொலை

66பார்த்தது
மதுரை: 17 வயது சிறுவன் செல்போனை உடைத்துவிட்டு தற்கொலை
மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன். அவரது மகனான ஹரிஹரசுதன் என்ற 17 வயது சிறுவன் 11 ஆம் வகுப்பு வரை படித்து முடித்த நிலையில் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் கடந்த கடந்த ஒரு வருடமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடி, பப்ஜி, ப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் கேம்கள் விளையாடிக்கொண்டே இருந்துள்ளார். தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டே இருந்த நிலையில் பெற்றோர் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் ஆன்லைன் கேம்களுக்கு முழுமையாக அடிமையாகியுள்ளார். 

இதன் காரணமாக தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து நேற்றுமுன்தினம் வீட்டில் திடீரென மாடியில் இருந்து அலறல் சத்தம் கேட்டவுடன் மாடிக்குச் சென்று பார்த்தபோது சிறுவன் திடீரென வீட்டு மாடியில் இருந்து தனது செல்போனை உடைத்து நொறுக்கிவிட்டு அருகில் உள்ள மாடியில் நின்றுகொண்டிருந்த சிறுவர் ஒருவரைப் பார்த்து எனது அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள் என கூறிவிட்டு மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதனையடுத்து படுகாயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் உடலானது உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டது. சிறுவன் குறித்து கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி