மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளதாகவும், அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மதுரை நகரம் குப்பையாக இருப்பதற்கு
திமுக அமைச்சர்களும் மாநகராட்சியுமே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், சனாதானம் குறித்து தான் பேசியதை யாரோ திரிப்பதாகவும் அவர் கூறினார். மக்களுக்கான அரசு என்றும், தமிழக வெற்றிக் கழகம் எல்லோருமான அரசாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.