மதுரை மற்றும் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 186 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உட்பட 210 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.