மதுரை: 4பேருக்கு டெங்கு காய்ச்சல்;அரசு மருத்துவமனையில் அனுமதி

1பார்த்தது
மதுரை: 4பேருக்கு டெங்கு காய்ச்சல்;அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் தேங்கல் மற்றும் கொசு வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடல் வலி, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டோரின் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்க விடக்கூடாது எனவும், உடல் நலம் பாதித்தால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி