மதுரை மாநகர் மகாலிபட்டி காளிதாஸ் ரைஸ்மில்லில் இன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவுன்குமார் (24), விஷால் (24), ராஜினிஸ் (22), அஸ்தோஸ் (25) ஆகிய நான்கு தொழிலாளர்கள் பாய்லரில் அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென மயங்கி உயிருக்கு போராடிய அவர்களை, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் CPR முறையில் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.