மதுரை ஆனையூரில் நடுவீட்டில் ரத்த வெள்ளத்தில் முதியவர் பழனிச்சாமி சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்பு மகள் சித்ராதேவி, அவரது கணவர் சரத்குமார் மற்றும் நண்பர் விஜயகுமார் ஆகியோர் பணத்துக்காக பழனிச்சாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்தார். பீரோவில் இருந்த பணத்தையும், செல்போனையும் திருடிக் கொண்டு தப்பிச் சென்ற மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.