மதுரை: விவசாயிகள் பயன்பெற வேளாண்துறை அழைப்பு

516பார்த்தது
மதுரை: விவசாயிகள் பயன்பெற வேளாண்துறை அழைப்பு
வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் சிறப்பு ராபி பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என வேளாண் துறை உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்துள்ளார். சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி பாஸ்புக், ஆதார் அட்டை கொண்டு இ-சேவை மையத்தில் காப்பீடு செய்யலாம். நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.540 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி