மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்றும், திமுக மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் கூறினார். திமுக தலைவர் 505 வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு, 66 மட்டுமே நிறைவேற்றியுள்ளார். இதனால் பல்வேறு தரப்பினர் போராடி வருவதாக தெரிவித்தார். இந்த தேர்தலில் ராமதாசுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு, 'அது முடிஞ்சுபோன கதை' என்று பதிலளித்தார்.