மதுரை: அமைச்சர் மூர்த்திக்கு சவால் விட்ட அதிமுக வேட்பாளர்

0பார்த்தது
மதுரை கிழக்கு அமைச்சர் மூர்த்திக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாங்குடி மகேந்திரன் பேசுகையில்; அமைச்சர் மீது நிலம் வாங்கி அங்கு மட்டும் சாலை அமைக்கிறார், கமிஷன் வாங்கவே பணிகளை செய்கிறார். மேலும், அமைச்சர் எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார், நான் லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் கோயில் சத்தியம் செய்வதாகவும் சவால் விடுத்தார். திமுக 593 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அதிமுக ஆட்சியில் இட ஒதுக்கீடு பெற்று பலர் மருத்துவம் படித்ததாகவும், மதுரை மாநகராட்சியில் 2000 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள் என்றும் அவர் கூறினார். அமைச்சர் பயந்து தன் ஆதரவாளர்களை மிரட்டுவதாகவும், 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி