மதுரை: அஜித்குமார் கொலை வழக்கு.. 9ம் தேதி ஒத்திவைப்பு

0பார்த்தது
மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த மதுரையைச் சேர்ந்த நிகிதா இன்று ஆஜரானார். நிகிதா அளித்த புகாரை முடித்து வைக்க உள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து நிகிதாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும், புகார் வழக்கை முடித்து வைக்கலாம் என்றும் நிகிதா தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி