மதுரை: சிறார் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

71பார்த்தது
மதுரை: சிறார் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
தொழிலாளர் துறை சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறார் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

மதுரை தொழிலாளர் இணை ஆணையர் பெ. சுப்பிரமணியன் தலைமை வகித்து, உறுதிமொழி வாசகங்களைப் படித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர். சந்திரசேகர், அரசுத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து, மதுரை எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் சிறார் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், விழிப்புணர்வு கையொப்ப இயக்கமும் நடைபெற்றது. பிறகு, வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியையும், பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி சிறார் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் பெ. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து அலங்காநல்லூர் கலைக் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. மதுரை தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநர் வேலுமணி, துணை இயக்குநர் சுதாகர், மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூ. கார்த்திகேயன், துணை இயக்குநர் சுதாகர், தொழிலாளர் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி