மதுரை: மாதர் சங்கத்தினரை போலீசார் கேலி செய்ததாக வாக்குவாதம்

0பார்த்தது
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் தெற்குவெளி மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். அப்போது மாதர் சங்கத்தினரை பார்த்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தது போதும் எந்திரிங்க என காவல்துறையினர் கேலியாக பேசியதாக கூறி மாதர் சங்கத்தினர்  கடும் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி