மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்திவரும் சுந்தர் என்பவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு தல்லாகுளம் பகுதியில் சிலர் கடத்திச் சென்றதாக வந்த புகாரில் சுந்தரை மீட்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவரும் நிலையில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 நாட்களாகியும் சுந்தரை மீட்க முடியாத நிலையில் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். பணத்திற்காக கடத்தப்பட்டாரா? வேறு எதுவும் காரணம் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட சுந்தர் மதுரையில் உள்ள பிரபல மில் நிறுவனமான மீனாட்சி மில் உரிமையாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியர் அலுவலகம் தொடங்கி காவல் ஆணையர் அலுவலகம் வரை உள்ள முக்கிய பகுதியான மதுரை தல்லாகுளம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து ஆட்கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது காவல்துறையினருக்கு சவாலை உருவாக்கி வருகிறது.