மதுரை: பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்

0பார்த்தது
பீகார் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, மதுரை பாஜக மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில், மதுரை முனிச்சாலை பகுதியில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர். வணிக வளாகங்கள் உட்பட பல பகுதிகளில் மேளதாளங்களுடன் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.