மதுரை: காதலா் தினத்தில் ரத்த தானம்

376பார்த்தது
மதுரை: காதலா் தினத்தில் ரத்த தானம்
மதுரையில் காதலர் தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சமூக ஒற்றுமை, மனிதநேயம், ஜாதி ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் இளைஞர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனர். பெரியார் நெறியாளர் பி. வரதராஜன் பேசுகையில், "ரத்தத்தில் ஜாதி, மத வேறுபாடு கிடையாது. மனித உயிரைக் காக்கும் இந்தச் செயல், ஜாதி மறுப்பின் அடையாளமாகும். ஒவ்வொருவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்து சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்" என்றார். மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) தி. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி