மதுரையில் நடைபெற்ற தவெக நிர்வாகியின் திருமண விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், மணமேடையில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண் சுபஸ்ரீக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். காலை உணவு அருந்தாததால் மணப்பெண் மயக்கமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அருண்ராஜின் துரித நடவடிக்கையால் மணப்பெண் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.