மதுரை: தெற்குவாசல் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் தொடர்பான வழக்கு

62பார்த்தது
மதுரை தெற்கு வாசலைச் சேர்ந்த முகமது அன்சார் தாக்கல் செய்த மனு: மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் செயற்குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த நிர்வாகக் குழுவுக்கான தேர்தலில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டோம். 

இந்த நிலையில், நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்குகளைப் பட்டியலிடுவது குறித்து வக்ஃபு வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் பள்ளிவாசல் நிர்வாகக் குழு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, 20 பேர் கொண்ட நிர்வாகக் குழுவைக் கலைத்து கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வக்ஃபு வாரியத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இந்தச் சூழலில் தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகத்தை நேரடியாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வக்ஃபு வாரியம் முயற்சி செய்து வருகிறது. 

எனவே, மேல்முறையீடு மனு தீர்ப்பு வரும் வரை பள்ளிவாசல் நிர்வாகத்தைக் கைப்பற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு குறித்து வக்ஃபு வாரியத்துக்கு குறிப்பாணை அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பள்ளிவாசலில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி