மதுரை: முதல்வர் ஸ்டாலின் வருகை; பல்வேறு நிகழ்வில் பங்கேற்பு

398பார்த்தது
மதுரை: முதல்வர் ஸ்டாலின் வருகை; பல்வேறு நிகழ்வில் பங்கேற்பு
முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று சிறப்பு விமானத்தில் மதுரை வருகை தந்து, காலை 10.30 மணிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். வடபழஞ்சியில் 'பினாகிள் இன்போடெக்' நிறுவனத்தின் பொறியியல் மையக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தையும், ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தையும் தொடங்கி வைக்கிறார். மேலும், வண்டியூா் கண்மாய் பூங்கா, அங்கூரான் நவீன அறிவியல் மையம், வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், மற்றும் ஊரகக் குடிநீா்த் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மாலையில், திமுக தென் மண்டல பாக முகவா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தொடர்ந்து, காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

தொடர்புடைய செய்தி