மதுரை மாவட்டம், கீழக்குயில்குடியில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவி ஷாலினி தனது இரு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த சம்பவத்தில், ஷாலினி தனது கணவர் மகேஸ்வரனை தொடர்பு கொண்டு விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 6 வயது மோகனாஸ்ரீ உயிரிழந்தார். 4 வயது விஜயாஸ்ரீ மற்றும் ஷாலினி சிகிச்சை பெற்று வருகின்றனர்.