மதுரையின் வரலாற்று சிறப்புமிக்க அடையாளமாக திகழும், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதனைக் காண வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று (10.05.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் தலைமையில், திருவிழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.