மதுரை: சித்திரை திருவிழா சிறப்பு ரயில் இயக்கம்

71பார்த்தது
மதுரை: சித்திரை திருவிழா சிறப்பு ரயில் இயக்கம்
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11:30 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் காலை 7:55 மணியளவில் மதுரை வந்தடையும். 

தொடர்ந்து, மே 12ம் தேதி மதுரையில் இருந்து இரவு 11:30 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் காலை 7:50 மணியளவில் தாம்பரம் சென்றடையும். குளிர்சாதன பெட்டிகள், சாதாரண முன்பதிவு பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் என 20 பெட்டிகள் இந்த சிறப்பு ரயிலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி