மதுரை: ரூ.2.94 லட்சம் மோசடி.. சிக்கிய தம்பதி

0பார்த்தது
மதுரை: ரூ.2.94 லட்சம் மோசடி.. சிக்கிய தம்பதி
மதுரை செல்லூர் அஹிம்சாபுரத்தை சேர்ந்த அர்ஜூன்(24) புதிய வீடு கட்ட திட்டமிட்டபோது, அண்ணாநகரை சேர்ந்த கவுதம்(34) மற்றும் அவரது மனைவி அத்ரிஜா(29) ஆகியோர் அர்ஜூனிடம் வீடு கட்ட தேவையான பணத்திற்காக 21 பவுன் நகையை  பெற்றுள்ளனர். அந்த நகையை ரூ.10.74 லட்சத்திற்கு விற்று, ரூ.7.80 லட்சத்தை மட்டும் அர்ஜூனிடம் கொடுத்துள்ளனர். மீதி ரூ.2.94 லட்சத்தை தராமல் இழுத்தடித்த தம்பதி, பணத்தை கேட்டபோது அர்ஜூனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து செல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.