மதுரை: குறுக்கே வந்த நாய்; அரசு பேருந்து மோதி உயிரிழப்பு

0பார்த்தது
மதுரை: குறுக்கே வந்த நாய்; அரசு பேருந்து மோதி உயிரிழப்பு
மதுரை மாநகரில் ஜீவா நகரைச் சேர்ந்த வெங்கடசுப்பு மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் நேற்று அலங்காநல்லூர் செல்வதற்காக பைக்கில் சென்றனர். சிக்கந்தர்சாவடி அருகே சாலையில் குறுக்கே நாய் வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த தம்பதியினர் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அலங்காநல்லூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகரில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய் மற்றும் கால்நடைகளால் மனித உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி