மதுரை: டிரைவர்களுக்கு முதலுதவி பயிற்சி

272பார்த்தது
மதுரை: டிரைவர்களுக்கு முதலுதவி பயிற்சி
மதுரை ரெட் கிராஸ் சார்பில் அரசுத்துறையில் உள்ள டிரைவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு பயிற்சி பள்ளி துணை இயக்குனர் பழனிவேல் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், விபத்து காலங்களில் உயிரிழப்பைத் தடுக்க ரத்த இழப்பு தடுப்பு, கட்டு போடுதல், மாரடைப்பு, வலிப்பு, பாம்புகடி, நாய்க்கடி போன்றவற்றுக்கான முதலுதவிகள் குறித்து பயிற்றுநர் ராஜ்குமார் விளக்கினார். விபத்தின்றி வாகனம் ஓட்டுவது மற்றும் 'கோல்டன் ஹவர்' நேரத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.